[X] Close

கிஷோர் பியானியின் ஃப்யூச்சர் குழும பங்குகளை ரூ.24,713 கோடிக்கு வாங்குகிறது ரிலையன்ஸ்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனம், சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு தனது சேவையை விரிவுபடுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
 
இந்தியாவிலேயே சில்லறை வணிகத்தில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் சில்லறை வணிகத்தில் எட்டு மடங்கு வளர்ந்துள்ளது. 11 மடங்கு லாபம் ஈட்டியுள்ளது.
 
image
 
இந்நிலையில் கிஷோர் பியானியின் சூப்பர் மார்க்கெட் நிறுவனமான பியூச்சர் என்டர்பிரைசஸ் நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது. பிக் பஜார், ஹைப்பர் சிட்டி உள்ளிட்ட சில்லறை நிறுவனங்களை நிர்வகித்து வரும் ஃப்யூச்சர் குழுமத்தின் பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குகிறது.
 
பியூச்சர் ரீட்டெய்ல் வணிகத்துக்கு நாடெங்கும் மொத்தம், 1,800-க்கும் மேற்பட்ட ஸ்டோர்கள் உள்ளன. இதன்மூலம் ஸ்டோர்கள் பிரிவில் முதலிடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
image
 
ஃப்யூச்சர் ரீடெயில் கம்பெனி கடந்த பல மாதங்களாக கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்தவில்லை என கூறப்பட்டது. 6 ஃப்யூச்சர் குழும கம்பெனிகளின் கடன்கள் எல்லாவற்றையும் சேர்த்து சுமார் 12,989 கோடி ரூபாய் கடன் பாக்கி இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்நிறுவனத்தின் பங்குகளை ரிலையன்ஸ் குழுமம் கையகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
loading...

Advertisement

Advertisement

Advertisement