மூன்றாவது நாளாக இன்றும்... கல்லூரி தகுதிப்பட்டியல் மெரிட்லிஸ்டில் சன்னி லியோன் பெயர்..!

Sunny-Leone----in-merit-list-of-3-west-Bengal-colleges--Complaint-filed

பாலிவுட் நடிகை சன்னிலியோனின் பெயர் மேற்கு வங்கத்திலுள்ள கல்லூரியின் தகுதிப்பட்டியல் மெரிட்லிஸ்ட்டில் மூன்றாவது நாளாக இன்றும் வெளிவந்துள்ளது.


Advertisement

image

சன்னி லியோன் என்ற பெயருடன் மேற்கு வங்கத்தில் உள்ள மூன்று கல்லூரிகளுக்கு இளங்கலை படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். இதனால் அதோஷ் கல்லூரி மற்றும் பட்ஜ் கல்லூரி உள்ளிட்ட மூன்று கல்லூரிகளின் தகுதிப்பட்டியலில் மெரிட் லிஸ்ட்டில் சன்னி லியோன் பெயர் இடம்பெற்று வருகிறது. இதுபோன்ற விஷமசெயலை செய்த நபர்களுக்கு எதிராக கல்லூரி நிர்வாகத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.


Advertisement

புகார்களின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. “சன்னி லியோன் பெயர் பட்டியல்களில் இடம்பெற்றது ஆன்லைன் நுழைவு அமைப்பில் உள்ள குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. தவறான தகவலுடன் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement