ஐபிஎல்-ல் கலந்துகொள்ளவிருந்த 2 வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா - பிசிசிஐ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக எடுக்கப்பட்ட கொரோனோ பரிசோதனையில் இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது


Advertisement

image

செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கவிருக்கிறது. இதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தீவிரமாக செய்துவரும் பிசிசிஐ நிர்வாகம் வீரர்கள், ஐபிஎல் ஊழியர்கள், பிசிசிஐ ஊழியர்கள் மற்றும் துணை பணியாளர்கள் என மொத்தம் 1,988 பேருக்கு ஆகஸ்ட் 20 முதல் 28 ஆம் தேதிவரை கொரோனா பரிசோதனை செய்தது. இதில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி ஐபிஎல் மருத்துவக்குழு கண்காணித்துவருகிறது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement