வைட்டமின் டி அளவுக்கு அதிகமானால் இவ்வளவு பிரச்னை வருமா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் வைட்டமின் டி முக்கியபங்கு வகிக்கிறது. எலும்புகள் மற்றும் பற்களுக்குத் தேவையான ஒன்று. உணவிலிருந்து கால்சியத்தை உறிஞ்ச உதவும். மேலும் பல நோய்களுக்கு எதிராக போராட உதவும். ஆனால் அதுவே அதிகமானால் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.


Advertisement

ஹைபர்கால்சீமியா

ஹைபர்கால்சீமியா என்பது இரத்தத்தில் அதிக அளவு கால்சியம் இருக்கும் ஒரு நிலை. வைட்டமின் டி அதிக அளவில் இருப்பதால் உண்ணும் உணவிலிருந்து உடலில் கால்சியம் உறிஞ்சுதலும் அதிகமாகிறது. அதிகப்படியான கால்சியம் இருப்பது பசியின்மை, மலச்சிக்கல், குமட்டல், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதுபோன்ற பல பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.


Advertisement

சிறுநீரகம் பழுதாகும்

வைட்டமின் டி அளவுக்கு அதிகமாக இருந்தால் சிறுநீரக நோய்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது. ஏற்கனவே சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் வைட்டமின் டி மாத்திரைகளை எடுக்க விரும்பினால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

image


Advertisement

செரிமான பிரச்னைகள்

உடலில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் அளவு அதிகரித்தால் வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல செரிமான பிரச்னைகள் வரும். சில நேரங்களில் இவை மற்ற பிரச்னைகளின் அறிகுறிகளாகக்கூட இருக்கலாம். எனவே கூடுதல் மருந்துகளை எடுத்துக்கொள்பவராக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

எலும்பு பிரச்னை

எலும்பு ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி கட்டாயம் தேவை. ஆனால் இந்த வைட்டமின் அதிகமாக இருந்தால் எலும்புகளில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும். எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க, கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை பரிந்துரைக்கப்பட்ட அளவில் உட்கொள்வது அவசியம்.

image

குமட்டல், வாந்தி மற்றும் பசியின்மை

உடலில் அதிகப்படியான கால்சியம் சேரும்போது குமட்டல், வாந்தி மற்றும் பசியின்மைக்கு வழிவகுக்கிறது. உடலில் அதிகமான கால்சியம் சேரும்போது ஏற்படும் பக்க விளைவுகளை ஆய்வுகள் விளக்கியுள்ளன.

அன்றாட உணவில் வைட்டமின் டி சேர்க்கும் முன்பு ஒரு நிபுணரை அணுக வேண்டும். வயது, பாலினம் மற்றும் உடலில் இருக்கும் மருத்துவ நிலைமைகளுக்கு ஏற்ப சரியான அளவை மருத்துவரால் மட்டுமே பரிந்துரைக்கமுடியும்.

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement