"ரசிகர்கள் மிகவும் கனிவானர்கள்" - நடிகை திஷா பட்டாணி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியா முழுவதும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய ஆன்லைன் கருத்துக்கணிப்பில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் பெண்களின் பட்டியலில் நடிகை திஷா பட்டாணி முதலிடம் பெற்றுள்ளார். அதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நாற்பது பெண்கள் இடம்பெற்றுள்ளனர். பெரும் அழகு, நம்பிக்கை, திறமை, ஸ்டைல் போன்ற நற்பண்புகளால் அவர்கள் பேசப்படுபவர்களாக இருக்கவேண்டும்.


Advertisement

image

2019ம் ஆண்டுக்கான அதிகம் விரும்பப்படும் பிரபல பெண்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள திஷா பட்டாணி, பாஹி3, மலாங் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். "ரசிகர்கள் மிகவும் கனிவானவர்கள் என்பதை உணர்கிறேன். என்மீது காட்டிய அன்பிற்கும், நான் அடைந்துள்ள அழகிய உணர்வுகளுக்கும் நன்றியுள்ளவளாக இருப்பேன்" என்று நெகிழ்ந்துள்ளார்.


Advertisement

"நான் ஃபேஷனாக இருப்பதால் அல்லது ஃபிட்டாக இருப்பதால் அதிகம் விரும்பப்பட்டிருக்கலாம். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களின் அன்பிற்கும் அவர்கள் என்னை விரும்புவதற்கும் நன்றி கூறுகிறேன்" என்று அன்பை வெளிப்படுத்துகிறார் திஷா.

image
"என் தாயும் சகோதரியும் எனக்கு ஊக்கமளிப்பவர்கள். இந்த இரண்டு வலிமையான பெண்கள்தான் நான் சிறந்தவளாக உருவாகக் காரணமானவர்கள். அடுத்து என் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், என் குழுவினர் மற்றும் முக்கிய ரசிகர்களுக்குத்தான் எல்லா பாராட்டும் சேரவேண்டும். எப்போதும் ரசிகர்களுக்கு சிறந்தவற்றை வழங்கவேண்டும் என்பதில் நான் உந்தப்படுகிறேன. அந்தப் பொறுப்புணர்வுதான் எனக்கு ஊக்கம் அளிக்கிறது" என்கிறார் திஷா.

அதெல்லாம் ஓகே. திஷா பட்டாணி மிகவும் விரும்பும் பாலிவுட் நடிகர் யார் தெரியுமா? ஷாரூக்கான்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement