[X] Close

திருமண சீர்வரிசையில் நடந்த வெடி விபத்து: 6வயது சிறுவன் பலி; மற்றொரு சிறுவன் படுகாயம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருவிடைமருதூர் அருகே திருமண சீர்வரிசை நிகழ்ச்சியில் நடந்த வெடி விபத்தில் 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.


Advertisement

image
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே உள்ள முள்ளுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். விவசாயியான இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் நலங்கு வைத்து சீர்வரிசை செய்யும் விழா விமர்சையாக நடந்தது.

image
அவரது உறவினர்கள் சீர்வரிசை கொண்டு வரும்போது கயிற்றில் வெடிகளை வரிசையாக கட்டி வெடித்து கொண்டாடினர். அப்போது தீடீரென்ற வெடித்த வெடியால் அருகில் நின்றிருந்த குத்தாலம் மாதிரிமங்கலத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மகன் சக்தி (6) மற்றும் முள்ளுக்குடி பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் பிரவீன் (6) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.


Advertisement

அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சிறுவன் சக்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்றொரு சிறுவன் பிரவீனுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

image
இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சீர்வரிசை விழாவில் நடந்த வெடி விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தால் அக்கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. வெடி விற்பனை செய்த திருவாலங்காடு சின்னதுரை மற்றும் பாண்டியனை கைது செய்த பந்தநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement