கொடைக்கானல்: பி.எஸ்.என்.எல் இணையசேவை பாதிப்பால் வங்கி பரிவர்த்தனைகள் முடக்கம் எனப் புகார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் சில வாரங்களாக பி.எஸ்.என்.எல் இணையசேவை பாதிப்பால் வங்கி பரிவர்த்தனைகள் முடங்கியுள்ளன.


Advertisement

image
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனுர், கும்பூர், கீழானவயல், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, போளூர் உள்ளிட்ட கிராமபகுதிகளில் பி.எஸ்.என்.எல் அலைபேசி சேவையும், இணைய சேவையும் சில வாரங்காளாக முற்றிலும் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

image
இதனால் அப்பகுதி கிராமங்களுக்கு உள்ள பி.எஸ்.என்.எல் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் இருக்கும் ஒரேஒரு பஞ்சாப் தேசிய வங்கியில் பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் விவசாயிகள் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.


Advertisement

image
இதனால் விவசாய பணிகளுக்கான இடுபொருட்கள், விதைகள் உள்ளிட்டவைகளை வாங்க முடியாமலும், விளைவிக்கப்பட்ட காய்கறிகளை சந்தைப்படுத்துவதிலும் சிக்கல் தொடர்வதாகவும் அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். பி.எஸ்.என்.எல் நிர்வாகத்திடம் பலமுறை இப்பிரச்சனை குறித்து புகார் அளித்தும் பயனில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு மாற்றாக மற்றொரு இணைய சேவையை வங்கிக்கு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement