கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அடுத்த சில வாரங்களில் துபாயில் ஆரம்பமாக உள்ளது இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர்.
வீரர்கள், அணி நிர்வாகிகள் என கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெறிக்காட்டு முறைகளை வெளியிட்டது பி.சி.சி.ஐ.
அதை பின்பற்றி ஐ.பி.எல் தொடரில் விளையாட உள்ள வீரர்களில் பெரும்பாலானோர் துபாய்க்கு சென்றுள்ள நிலையில் கொரோனா பரவல் அதிகமுள்ள சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் பயிற்சி முகாமை மேற்கொண்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் சி.எஸ்.கே -வின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்.
“ஐ.பி.எல் தொடர் துபாயில் நடத்தப்படுவது உறுதியானதும் சென்னையில் பயிற்சி முகாமை நடத்துவது எனக்கு சரியாக படவில்லை. கொரோனா அச்சுறுத்தல் தான் அதற்கு காரணம். அது குறித்து தோனியிடம் நான் சொன்ன போது, பயிற்சி முகாம் சென்னையில் நடந்தாக வேண்டும் என தெளிவாக சொல்லிவிட்டார்.
நான்கு - ஐந்து மாதங்கள் கிரிக்கெட் விளையாடாத எங்களுக்கு இந்த பயிற்சி பூஸ்டாக இருக்கும் என சொன்னார். மேலும் துபாயில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை சென்னையிலிருந்தே ஆரம்பித்து விடலாம் என சொன்னார். அதன்படியே பயிற்சி முகாமிற்கு சம்மதம் தெரிவித்தேன்” என சி.எஸ்.கே -வின் யூடியூப் சேனலில் அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை - சிம்ஸ் மருத்துவமனை விளக்கம்
வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் விறுவிறுப்பான மறு வாக்குப்பதிவு!
மேற்கு வங்கம் : தொடங்கியது 5ஆம் கட்ட வாக்குப்பதிவு
5 முறை சிறந்த காமெடியன்; 3 முறை பிலிம்ஃபேர் : நகைச்சுவையில் முத்திரை பதித்த விவேக்!
நடிகர் விவேக் மறைவு சொல்லிமாளாத வேதனை... துக்கத்தில் தழுதழுத்த திரைப் பிரபலங்கள்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்