தான் அடித்த சிக்ஸ் மூலம் தனது காரின் கண்ணாடியையே தகர்த்த அயர்லாந்து கிரிக்கெட் வீரர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கெவின் ஓ பிரையன் டி20 போட்டியில் அடித்த ஒரு சிக்ஸ் அவரது கார் கண்ணாடியை உடைத்துள்ளது. 


Advertisement

அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர் அயர்லாந்தின் கெவின் ஓ பிரையன். 


Advertisement

கடந்த 2011 உலக  கோப்பை  தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 50 பந்துகளில் சதம் அடித்தவர் கெவின்.

அயர்லாந்தில் நேற்று நடைபெற்ற இன்டர் புரொவின்சியல் டி20 டிராபி தொடரில் நார்த் - வெஸ்ட் வாரியர் அணிக்கு எதிரான போட்டியில் லெய்ன்ஸ்டர் லைட்னிங் அணிக்காக 37 பந்துகளில் எட்டு  சிக்ஸ் உட்பட 82 ரன்களை விளாசியிருந்தார் கெவின்.

image


Advertisement

அதில் அவர் அடித்து ஒரு சிக்ஸ் டப்லினில் அமைந்துள்ள மைதானத்தின் கூரையை கடந்து பறந்து சென்று கார் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொயோட்டா காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்துள்ளது. 

போட்டி முடிந்த பிறகு அந்த காரின் உரிமையாளர் கெவின் என்பது தெரியவந்துள்ளது. 

image

தற்போது அந்த காரை டொயோட்டா சர்வீஸ் சென்டரில் கண்ணாடியை மாற்றுவதற்காக கொடுத்துள்ளார் கெவின். 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement