நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தையும், மூத்த திரைப்பட இயக்குநருமான ஏ.பி.ராஜ், அண்மையில் காலமானார். தன் தந்தையைப் பற்றிய நினைவுகளை அவர் இந்து தமிழ் திசை நாளிதழுக்கு பகிர்ந்துகொண்டுள்ளார்.
தன்னுடைய தந்தை இயக்கிய திரைப்படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவை நகைச்சுவை, உணர்வுகள், ஆக்ஷன் நிறைந்த நல்ல பொழுதுபோக்குத் திரைப்படங்கள் என்று கூறியுள்ள சரண்யா, " அப்பாவின் திரைப்படங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இயக்குநர் ஏ.பி. ராஜ், 1989 ம் ஆண்டு 'அர்த்தம்' படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் நுழைந்தார். "பிறகு அறுபதுகளில் இருந்து எழுபதுகள் வரை எந்த மாதிரியான திரைப்படங்களை எடுத்தார் என்பது எனக்குத் தெரியவந்தது. 'இரும்பழிக்கல்' போன்ற படங்களைக் காண டிக்கெட் வாங்க பெரிய வரிசையில் நின்றதாக எனது சக நடிகர்கள் என்னிடம் கூறியுள்ளனர்" என்று நெகிழ்ந்துள்ளார் சரண்யா.
"மணிரத்னம் சார் 'நாயகன்' வாய்ப்பை எனக்குத் தந்தபோது நான் திரைப்படங்களில் நடிப்பது குறித்து அப்பா பெரிய ஆர்வம் காட்டவில்லை. திரைப்படத் துறையில் தொழிலைத் தொடர நான் நிறைய தியாகங்கள் செய்யவேண்டும் என்று அப்பா கூறினார். எனக்கு நடிக்கவே விருப்பம் இருந்ததால் அவர் என்னை ஆதரித்தார். நான் நடித்த படங்கள் அவருக்குப் பிடித்திருந்தன. ஆனால், இன்றைய தலைமுறைக்கு அவரைப் பற்றித் தெரியவில்லை. அவருக்கு இன்னும் அதிக அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதில்லை" என்றும் சரண்யா பொன்வண்ணன் மனந்திறந்து பேசியுள்ளார்.
Loading More post
12-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
வெளியானது தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல்?
ரமலான் அன்று சி.பி.எஸ்.இ தேர்வு; தேதி மாற்றம் பரிசீலிக்கப்படும் என மத்திய அமைச்சர் பதில்
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை