[X] Close

"சச்சின் தோனியுடன் இணைந்தது பெருமை" - கேல் ரத்னா குறித்து ரோகித் சர்மா !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேல் ரத்னா விருதுப் பெற்றவர்களான சச்சின், தோனியுடன் நானும் இணைந்தது மகிழ்ச்சியை தருவதாக இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.


Advertisement

image

ரோகித் சர்மாவுக்கு மத்திய அரசின் சார்பில் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இது குறித்து தன்னுடைய மகிழ்ச்சியை ரோகித் சர்மா பகிர்ந்துக்கொண்ட வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் "கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்த விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்கு என் நன்றிகள். சச்சின், தோனி, கோலியுடன் என்னுடைய பெயரும் கேல் ரத்னா விருது பெற்றவர்களுடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.


Advertisement

image

மேலும் "நாட்டுக்காக நீங்கள் விளையாடும்போது அதற்கான அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும்போது, அது ஒரு விளையாட்டு வீரரை மேலும் ஊக்கப்படுத்தும். எனவே நாட்டுக்காக இன்னும் சிறப்பாக நான் விளையாடுவேன், மேலும் பல வெற்றிகளையும் பெற்றுத் தருவேன்" என தெரிவித்துள்ளார் ரோகித் சர்மா.

loading...

Advertisement

Advertisement

Advertisement