[X] Close >

’பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள்...’ உச்சக்கட்ட பாதுகாப்பில் ஐபிஎல்..!

IPL-bubble-Bluetooth-bands-to-enforce-distancing--others----rooms-out-of-bounds

ஐபிஎல்-ல் பங்கேற்கும் வீரர்களின் சமூக இடைவெளியை கண்காணிக்கும் ப்ளூடூத் பேண்ட், மேக்கப் மேன்களுக்கு பிபிஇ கிட்கள் என உச்சக்கட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.    


Advertisement

‘எனக்கு ஹேர்கட் தேவைப்பட்டால் என்ன செய்வது? நாங்கள் அங்கு சமூக இடைவெளியை பராமரிக்கும்போது, நான் ஏன் மற்றொரு வீரரின் அறைக்கு செல்ல முடியாது? ஃபோட்டோஷூட்களின் போது, கட்டிப்பிடித்து ஹை-ஃபைவ் கொடுக்கலாமா? மேக்கப் செய்யும் நபருக்கான நெறிமுறை என்ன?  டீம் பார்பரிடம் பிபிஇ கிட் இருக்குமா? தொண்டை, மூக்கிலிருந்து சளி எடுத்து பரிசோதனை செய்வதற்கு பதிலாக உமிழ்நீர் பரிசோதனையைத் தேர்வு செய்யலாமா? நான் எப்போதுமே புளூடூத் பேண்டை அணிய வேண்டுமா...? ஐக்கிய அரபு எமிரேட்ஸில் திங்களன்று ஐபிஎல் அதிகாரிகள் நடத்திய வெபினாரில் வீரர்கள் எழுப்பிய சில கேள்விகள்தான் இவை.

image


Advertisement

 

ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளதால், கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது. இதற்காக பயோ பபுள் எனும் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள், பணியாற்ற உள்ள ஊழியர்கள், அவர்கள் தங்கும் ஹோட்டல் ஊழியர்கள் முதல் பேருந்து ஓட்டுநர் வரை அனைவரும் அதை விட்டு விலகக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வீரர்கள் யாரும் அறையை விட்டு வெளியே வரக்கூடாது, பக்கத்து அறையினருடன் பேசக்கூடாது. பக்கத்து அறையில் சகவீரர்கள் இருந்தால், பால்கனியில் நின்றுமட்டுமே பேச வேண்டும் என்று பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டன.


Advertisement

image

வீரர்கள் இரண்டு மீட்டர் தூர சமூக இடைவெளி விதியை மீறினால் அலாரம் ஒலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அதிநவீன ப்ளூடூத் பேண்ட் அணிய வேண்டும். வீரர்கள் தூங்கச் செல்லும்முன் மட்டுமே அதை கழற்ற வேண்டும். இந்த சாதனத்தின் செயல்பாட்டில் இன்னும் தெளிவு இல்லை என்றாலும், அவர்களுடன் தங்கியிருக்கும் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கூட இந்த ப்ளூடூத் பேண்ட் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அணி பேருந்தில் கூட, அவர்கள் ஒரு ஜிக்-ஜாக் பாணியில் உட்கார வேண்டும், இதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள மாட்டார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்  சீமர் ஜெய்தேவ் உனட்கட் வீரர்களின் பார்வையில் உள்ள சிரமத்தைப் பகிர்ந்து கொண்டார். "ஒருவருக்கொருவர் மற்றவர் அறைகளுக்குள் செல்லக்கூடாது என்பதற்கான கட்டுப்பாடு எங்களுக்கு வீரர்களுக்கு மிகவும் கடினமான பகுதியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். கடந்த காலத்தில் நாங்கள் இதை எதிர்கொண்டதில்லை. நீங்கள் வீட்டை விட்டு இவ்வளவு நேரம் இருக்கும்போது யாரிடமாவது பேச வேண்டும். உண்மையில் இதைச் செய்வதை விடச் சொல்வது எளிது. ஆனால் வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.

சோதனையில் பாசிட்டிவ் வந்த ஒருவர் மீண்டும் ஒப்பந்தம் செய்ய முடியுமா என்று ஒரு வீரர்கள் தெரிந்து கொள்ள விரும்பினர். ஃபோட்டோ ஷூட்டிங்கின் போது, கேமரா குழுவினர் பிபிஇ கிட்களை அணிய வேண்டும் மற்றும் ஹேர்ஸ்டைலிஸ்டுகள் பணியில் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வெபினாரில் அறிவுறுத்தப்பட்டது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close