சிவகங்கை: சொத்துப்பிரச்னை - சித்தப்பாவின் தலையோடு காவல் நிலையம் சென்ற கொலையாளிகள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சொத்துப் பிரச்சனையில் உறவினரின் தலையை வெட்டி, அதனுடனே காவல்நிலையத்தில் சரண் அடைந்த நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement

image


சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை புதுவயல் தைக்கால் தெருவை சேர்ந்தவர் யூசுப் ரகுமான் (45). இவர் புதுவயல் சாலையில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார். இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டிணத்தில் வசிக்கும் இவரது அண்ணன் சகுபர் அலிக்கும் இடையே 2 கோடி மதிப்பிலான இடம் தொடர்பாக சொத்துப்பிரச்னை இருந்ததாகவும்,  இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 


Advertisement

image

 

இந்நிலையில் நேற்றுக் காலை எட்டு மணியளவில் யூசப்பின் கடைக்குச் சென்ற சகுபர் அலி மகன்கள் நியாஸ் மற்றும் அவரது தம்பி ரகுமான் யூசப் ரகுமானை அரிவாளால் தாக்கினர். இதனை பார்த்து அதிர்ச்சிடைந்த யூசப் தான் வைத்திருந்த அரிவாள் கொண்டு எதிர்தாக்குதல் புரிந்துள்ளார். ஆனால் அவரை மடக்கி பிடித்த நியாஸ் மற்றும் ரகுமான் அவரது தலையை துண்டாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே யூசப் உயிரிழந்தார். வெட்டிய தலையுடன் சாக்கோட்டை காவல் நிலையம் சென்ற கொலையாளிகள் தவறை ஒப்புக்கொண்டு சரணடைந்தனர். இருவரையும் கைது செய்த சாக்கோட்டை போலீஸார், யூசுப் ரகுமானின் உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement