டெல்லியின் பசுமையை 22 சதவீதத்திலிருந்து 25 சதவிகிதமாக உயர்த்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளது
கடந்த ஆண்டு வெளியான ஐஎஸ்எப் ஆர் வெளியிட்ட அறிக்கையின் படி “ 2019 ஆம் ஆண்டில் டெல்லியின் பசுமை விகிதமானது, டெல்லியின் மொத்தப் பரப்பளவில் 21.9 சதவிகிதமாக இருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த பசுமை விகிதமானது 20.6 சதவிகிதமாக இருந்தது.” எனக் கூறப்பட்டது.
இது குறித்து வனத்துறை அதிகாரி இஷ்வார் சிங் கூறும் போது “ இந்த பசுமைவிகிதமானது 25 சதவிகிதமாக உயரும் போது, டெல்லியின் மொத்தப் பரப்பளவில் (1484 சதுர கிலோமீட்டர்) 45 சதுர கிலோ மீட்டரில் உள்ள நிலங்கள் பசுமையாகும். இதன் மூலம் டெல்லியில் உள்ள பெரும்பான்மையான இடங்கள் பசுமையாக்கப்படும். இதற்காக நாங்கள் 5 வருட திட்ட அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளோம். எங்களுக்கு அதற்கான நிலங்கள் கிடைக்கும் பட்சத்தில் அடுத்த மூன்று வருடங்களில் இத்திட்டம் நிறைவு பெற்று விடும்.” என்று கூறினார்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்