ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? : முதலமைச்சர் பழனிசாமி பதில்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நீட் தேர்வை ஒத்தி வைப்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

நாகையில் இதுகுறித்து பேசிய அவர், “தமிழகத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாகவே வெளி மாநிலத்தில் உள்ளவர்களுக்கு பணி வாய்ப்பு தரப்படுகிறது. தமிழகத்தில் அதிக வேலை வாய்ப்புகள் இருக்கிறது. நாகை மாவட்டத்தில் 1016 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 37 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கருத்து கேட்பு கூட்டம் முடிந்த பிறகு தனி மாவட்டமாக இயங்கும். நீட் தேர்வை நடத்த வேண்டாம் என்று தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறேன்.

குழாய் பதிப்பில் பழைய பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. ஏற்கனவே உள்ள திட்டங்களை ரத்து செய்து இருக்கிறோம். குடி மராமத்து திட்டத்தின் கீழ் நாகையில் 1200 குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. 3 ஆண்டுகளில் 2252 பசுமை வீடுகள் கட்டபட்டு உள்ளன.


Advertisement

EDAPPADI | வரும் 29 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர்  ஆலோசனை

கொரோனா வைரஸ் தடுப்பு பணி குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். நாகை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவல் இல்லாமல் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளார்கள். நாகை மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 812 சாலை பணிகள் நடைபெற்றுள்ளன. 33.5 கோடி ரூபாய் மதிப்பில் வேளாங்கண்ணியில் பாதாள சாக்கடைத் திட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வை ஒத்தி வைப்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. ரெடிமேட் ஜவுளி பூங்கா உருவாக்கினால் நாகை மிகப்பெரிய வளர்ச்சி அடையும். 2500 பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று, தற்போது சொல்ல முடியாது. 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களின் கூட்டத்திற்கு பிறகே முடிவு எடுக்கப்படும். நாகை மாவட்டத்தில் ஏரிகளை தூர்வாரி தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement