10 வருடங்களுக்கு பின் விஜயுடன் ஜோடி சேரும் தமன்னா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விஜய் நடிக்கவுள்ள 65வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 64வது திரைப்படம் மாஸ்டர். கொரோனா ஊரடங்கு காரணமாக திரைக்கு வராமல் இருக்கும் இந்த படத்தை, அண்மையில் பார்த்த விஜய் வெகுவாக ரசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் மீண்டும் தனக்காக ஒரு கதையை தயார் செய்யுமாறு லோகேஷ் கனகராஜிடம் அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

image


Advertisement

ஆனால் விஜயின் 65வது படமான அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. திரைவட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின்படி, விஜய்யை வைத்து இதுவரை 3 திரைப்படங்களை இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஷ் மீண்டும் 4வது முறையாக விஜயின் 65வது திரைப்படத்தில் இணையவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கவுள்ளாராம். அத்துடன் சன் பிக்ஸர்ஸ் படத்தை தயாரிக்கவுள்ளாதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளார் என்ற புதிய தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த விஜய்யின் 50வது திரைப்படமான ‘சுறா’வில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் விஜய்க்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளார்.


Advertisement

சுங்கச்சாவடிகளில் சலுகை பெற ஃபாஸ்டேக் கட்டாயம் : நெடுஞ்சாலைத்துறை

loading...

Advertisement

Advertisement

Advertisement