‘இந்தியாவின் ஆல்-டைம் சிறந்த வீரர் தோனியோ, கோலியோ, சச்சினோ அல்ல’ சுனில் கவாஸ்கர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

‘இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-டைம் சிறந்த நெம்பர் 1 கிரிக்கெட் வீரர் தோனியோ, கோலியோ, சச்சினோ அல்ல’  என தெரிவித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.


Advertisement

image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன் சுனில் கவஸ்கர் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-டைம் சிறந்த வீரர்  யார் என்பதை அண்மையில் சொல்லியுள்ளார். ‘வெவ்வேறு கால கட்டங்களில் கிரிக்கெட் ரசிகர்களை இந்திய அணியின் வீரர்கள் தங்கள் ஆட்டத்தின் மூலமாக உற்சாக படுத்தியுள்ளனர். 


Advertisement

தோனி, கோலி, சச்சின் என பல கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிக்காக ரன் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டருமான கபில் தேவ் இந்தியாவின் ஆல்-டைம் சிறந்த நெம்பர் 1 கிரிக்கெட் வீரர் என நான் கருதுகிறேன். 

image

கபில் தேவ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என ஆல் ரவுண்டர் ஆட்டத்திறன் மூலம் இந்தியாவை பல மோசமான சூழ்நிலைகளில் இருந்து மீட்டெடுத்து வந்துள்ளார். இந்திய அணியின் சிறந்த பீல்டர்களில் ஒருவராகவும் அவர் இருந்தார். அதனால் கபில் தான் பெஸ்ட்’ என தெரிவித்துள்ளார் கவாஸ்கர். 


Advertisement

இதையும் படிக்க : http://www.puthiyathalaimurai.com/newsview/78777/MS-Dhoni-insisted-on-organising-5-day-training-camp-in-Chennai-before-players-departed-for-Dubai

 

loading...

Advertisement

Advertisement

Advertisement