வேலூர்: லாட்ஜில் தங்கியிருந்த இராணுவ வீரர், அவரது மனைவி தற்கொலை!

Husband-and-wife-commit-suicide-while-staying-in-lodge-in-Vellore

வேலூர் அருகே லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்த கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

குடியாத்தம் கீழ்ஆழத்தூர் பகுதியை சேர்ந்த இராணுவ வீரர் புருசோத்தமன்(35). இவர் தனது மனைவி அம்முயுடன்(26) வேலூர் சிஎம்சி மருத்துவமனை எதிரில் உள்ளை லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார். புருசோத்தமனனி அப்பா ஆறுமுகம்(75) உடல் நலக்குறைவு காரணமாக சிஎம்சியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் நேற்று இரவு முதல் லாட்ஜில் ரூம் போட்டு தங்கியுள்ளனர்.

image


Advertisement

இந்நிலையில், இன்று புருசோத்தமனின் அண்ணன் ராஜ்குமார் அறையை திறந்து பார்த்த போது புருசோத்தமன் தூக்கிட்ட நிலையிலும் மனைவி கட்டிலில் இறந்த நிலையிலும் கிடந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement