மதுரையில் பூட்டிய வீட்டை உடைத்து அடுத்தடுத்து அரங்கேறிய கொள்ளை சம்பவம் தொடர்பாக தாய், மகன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகரில் கடந்த சில மாதங்களாக பூட்டியிருக்கும் வீடுகள் மற்றும் முதியவர்கள் இருக்கும் வீடுகளை குறிவைத்து தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. அதனைத்தடுக்க மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் தீவிர ரோந்து மற்றும் குற்றப்பிண்ணனி கொண்டவர்களின் விவரங்களை ஆராய்ந்து நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மதுரை கூடல்புதூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆனையூர், விளாங்குடி பகுதியில் கடந்த மாதம் மட்டும் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த சுமார் 35 சவரன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் இரண்டு லட்ச ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது,
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மதுரை மாநகர குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த இந்திரா என்ற பெண் தன்னுடைய 16 வயது மகன் மற்றும் அவருடைய நண்பர்களோடு சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது,
அதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து சுமார் 27 சவரன் நகை 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 45 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கைப்பற்றினர், மேலும் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த இந்திராவின் உறவினர் லட்சுமி, கருப்புசாமி, சூர்யா, தங்கப்பாண்டி உள்ளிட்ட 6 பேரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Loading More post
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மது அருந்தலாமா? - மருத்துவர் தரும் விளக்கம்
வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்: கே.எஸ்.அழகிரி
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு; கையெழுத்தானது ஒப்பந்தம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!