[X] Close >

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மறைவு: ஸ்டாலின், தினகரன் இரங்கல்

former-judge-AR-Lakshmanan-passes-away--M-K-Stalin--TTV-Dhinakaran-condolences

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்


Advertisement

image

மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் “ நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து சொல்லொணாத் துயரடைந்தேன். உச்சநீதிமன்றத்தில் இந்தியைக் கட்டாயமாக்கக் கூடாது என்பது உட்பட புகழ்மிக்க பல பரிந்துரைகளையும், தீர்ப்புகளையும் வழங்கியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபமும், இரங்கலும்” என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு.AR.லட்சுமணன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். நீதித்துறையில் பல்வேறு நிலைகளில் சிறப்புற பணியாற்றிய அவர், முக்கியமான பல தீர்ப்புகளையும் வழங்கியவர். அன்னாரது மறைவால் வாடும் அவரது மகனும் மூத்த வழக்கறிஞருமான திரு.AR.L.சுந்தரேசன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close