"எப்போதும் இந்திய கிரிக்கெட்டின் நம்பர் 1 வீரர் இவர்தான்"- சுனில் கவாஸ்கர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எப்போதும் இந்திய கிரிக்கெட்டின் நம்பர் 1 வீரர், முன்னாள் கேப்டன் கபில் தேவ்தான் என்று இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Advertisement

image

"இந்தியா டுடே"க்கு பேட்டியளித்துள்ள கவாஸ்கர் "என்னைப் பொறுத்தவரை கபில் தேவ்தான் இந்தியாவின் நம்பர் 1 வீரர். இப்போது மட்டுமல்ல எப்போதும் அவர்தான் என்னைப் பொறுத்தவரை நம்பர் 1. அவரால் மட்டுமே பந்துவீச்சாலும், பேட்டிங்காலும் இந்தியாவை வெற்றிப் பெற வைக்க முடிந்தது. அவரால் விரைவாக சதம் அடிக்க முடியும். அந்தச் சதம் போட்டியை தலைக்கீழாக மாற்றிவிடும்" என்றார்.


Advertisement

image

மேலும் தொடர்ந்த கவாஸ்கர் "இவையெல்லாம் அவர் செய்தும் காட்டிவிட்டார். ஒரு பீல்டராகவும் பல முக்கியமான கேட்சுகளை பிடித்து அசத்தியுள்ளார். என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர்" என்றார் அவர். கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. அந்த அணியில் சுனில் கவாஸ்கர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement