சேலம்: பாலியல் புகாரில் வெளிநாடுக்கு தப்பியோடிய மருத்துவர்.. 10 மாதங்களுக்குப் பிறகு கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சேலத்தில் பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரில் வெளிநாடு தப்பியோடிய மருத்துவர் 10 மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். சொந்த ஊர் திரும்பிய மருத்துவரை பெங்களூரு சென்று சேலம் மகளிர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement

image
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் அஸ்வின் (28). இவர் சேலம் அரியானூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் M.S., படித்து வந்தார். அப்போது அவருடன் படித்து வந்த சென்னையைச் சேர்ந்த சக மாணவி ஒருவருடன் காதல் ஏற்பட்டு பழகி வந்துள்ளார். சென்னை சேர்ந்த அந்தப் பெண் அஸ்வினை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் அஸ்வின் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சேலம் கொண்டலாம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தார்.

இந்த புகார் மீதான விசாரணை சேலம் மாநகர அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சேலம் மாநகர அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் பழனியம்மாள் தலைமையிலான காவல்துறையினர் மதுரை சென்று விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே அஸ்வின் வெளிநாடு தப்பி சென்றார்.


Advertisement

இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்திற்கு அஸ்வின் வருவது தெரியவந்ததை அடுத்து காவல் ஆய்வாளர் பழனியம்மாள் தலைமையிலான காவல்துறையினர் பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்று, அஸ்வினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்பு சங்ககிரி கிளை சிறையில் அடைத்தனர்.

loading...
Related Tags : சேலம்Salem

Advertisement

Advertisement

Advertisement