"தோனி சொன்னதால்தான் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம்"- சிஎஸ்கே தகவல் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தோனி சொன்னதால்தான் சென்னையில் பயிற்சிக்கான ஏற்பாட்டை செய்தோம் என்று சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


Advertisement

ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி துபாய் சென்றுள்ளது. துபாய் செல்வதற்கு முன்பாக சென்னையில் 5 நாள் பயிற்சி முகாமில் சிஎஸ்கே வீரர்கள் பங்கேற்றனர். அப்போதுதான் தோனி தன்னுடைய கிரிக்கெட் ஓய்வு குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இப்போது துபாயில் 5 நாள் தனிமைப்படுத்தலில் சிஎஸ்கே வீரர்கள் இருக்கிறார்கள்.

image


Advertisement

இந்நிலையில் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் "ஐபிஎல் போட்டிகள் நடைபெறபோகிறது என தெரிந்தவுடன் பயிற்சி முகாமை நடத்துவதற்கு எனக்கு சில தயக்கங்கள் இருந்தன. பயிற்சியை நடத்துவதற்கு கொரோனா தடுப்பு உயிரி பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்த வேண்டும். அப்போது பயிற்சி குறித்து தோனியிடம் ஆலோசனை கேட்பதற்காக மெஸேஜ் அனுப்பினேன்" என்றார்.

image

மேலும் தொடர்ந்த அவர் "ஆனால் பயிற்சி விவகாரத்தில் தோனி மிகவும் தெளிவாக இருந்தார். என்னிடம் அவர் 'சார் நாங்கள் 4-5 மாதங்களாக கிரிக்கெட் விளையாடவில்லை. அதனால் அணியின் வீரர்கள் அனைவரும் சென்னையில் ஒன்றுக் கூட வேண்டும். நாங்கள் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டும். அத்தகைய சூழல் துபாய் சென்ற பின்பும் எங்களுக்கு உதவும்' என்றார் தோனி. அதனால்தான் பயிற்சி முகாமை நடத்தினோம்" என்றார் காசி விஸ்வநாதன்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement