கொடைக்கானலில் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறிய அதிமுக

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொடைக்கானல் வடகவுஞ்சி கிராமத்தில் பலநூற்றுக்கணக்கான அதிமுகவினர் ஒன்றிணைந்து, தனிமனித இடைவெளி இன்றி கூடி, பொதுக்கூட்டம் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.image
கொரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதால் கொடைக்கானல் நகருக்குள் சுற்றுலா பயணிகள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையின்றி கொடைக்கானல் நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.


Advertisement

image
கொடைக்கானல் நகர மக்கள் அனைவரும் அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு கொரோனாவை ஒழிக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருமானம் இன்றி தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

image
கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது, பொதுவெளியில் 20 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்றும், சாலைகளில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்று கொடைக்கானல் நகர் பகுதிகளில் காவல்துறை பொது மக்களை கிடுக்குப்பிடி போட்டு முடக்கி வரும் நிலையில், அரசின் உத்தரவை மதிக்காமல் ஆளும் அதிமுகவினருக்கு மட்டும் இந்த முடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது போல கொடைக்கானல் வடகவுஞ்சியில் கட்சி கூட்டம் நடைபெற்றது.


Advertisement

image
கீழ்மலை வடகவுஞ்சி கிராமத்தில் பல நூற்றுக்கணக்கான அதிமுகவினர் ஒன்றிணைந்து, தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுக்கூட்டம் போட்டுள்னர். மேலும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் மாற்றுக்கட்சியினரை அதிமுகவில் இணைத்த நிகழ்வு மலைவாழ் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

image
சாமானியருக்கு ஒரு சட்டம், ஆளும் அதிமுக கட்சிக்கு ஒரு சட்டமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். காவல்துறையும் இந்த அத்துமீறல்களை வேடிக்கை பார்க்கும் நிலையால் கொடைக்கானல் காவல்துறை மீதான நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக சாமானியர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவதை தவிர்த்து, ஊரடங்கை முற்றிலும் தளர்த்தி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை நம்பி வாழ்க்கை நடத்தும் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதோடு, தமிழகத்தில் இயல்பு நிலையை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement