20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ட்டுவைன் பிராவா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ட்ரின்பாகோ அணியைச் சேர்ந்த பிராவா, சூக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய சாதனை படைத்தார். சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் இதுவரை 459 , டி-20 போட்டிகளில் பிராவோ விளையாடிள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான பிராவோ, 20 ஓவர் கிரிக்கெட்களில் வேறு எவரும் நிகழ்த்தியிராக சாதனையாக 500 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். கபீரியன் ப்ரீமியன் லீக் தொடரில் 100 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.
இதற்கிடையே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 600 விக்கெட்டுளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமை இங்கிலாந்தின் ஜிம்மி ஆண்டர்சன்னுக்கு கிடைத்துள்ளது. பாகிஸ்தான் -இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டி டிராவில் முடிந்தது. ஆனால் போட்டி கைவிடப்படும் முன் ஆண்டர்சன் பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலியின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 600க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெயரை பெற்றார்.
இதற்கு முன் முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன் மற்றும் அனில் கும்ளே ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் 600க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!