இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதனையடுத்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தோனியை புகழ்ந்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக்.
"இதை நான் சொல்லியாக வேண்டும் என்று நினைக்கிறேன். தோனி மாதிரியான ஒரு பெரிய வீரருக்கு முறையான ஃபேர்வெல் மேட்ச் நடத்தாதது பி.சி.சி.ஐ -யின் தோல்வி. இது என் நெஞ்சிலிருந்து நேராக வரும் வார்த்தைகள். அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களும் இதையே உணர்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். தோனிக்கு முறையாக சென்ட்-ஆப் கொடுக்காதது என் மனத்தில் காயம் ஏற்படுத்தியுள்ளது” என்று சக்லைன் அந்த வீடியோவில் கூறியிருந்தார்.
முஷ்டாக்கின் நிலைப்பாடு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் முரண்பட்ட நிலையில் இனி இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க வேண்டாம் என்று அவரை எச்சரித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
அதோடு முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் என அனைவரும் கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறையைப் பின்பற்றுவது குறித்தும் எச்சரிக்கை விடுத்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். அதை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்