கவுதம் மேனன் பட ஹீரோயினை மணக்கிறாரா ஆரவ்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழ்ப்படங்களில் சில வேடங்களில் நடித்தபிறகு, பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் பங்குபெற்று புகழ்பெற்றவர் ஆரவ் நஃபீஸ். அதற்கு பிறகு, சரண் இயக்கத்தில் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்தப்படம் பெரும் வெற்றியடையவில்லை என்றாலும், பலதரப்பட்ட விமர்சனங்கள் கிடைத்தன. செப்டம்பர் 6ஆம் தேதி இவர் கவுதம் மேனன் படத்தின் கதாநாயகி ராஹீயை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.


Advertisement

ஆரவ் பங்கேற்ற அதே ரியாலிட்டி ஷோவில் நடிகை ஓவியாவும் பங்கேற்றார். பலவித பிரச்னைகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என பேசப்பட்டது. ஆனால் இருவரும் நண்பர்கள்தான் என்றும், திருமணத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் ஓவியா தெளிவாகக் கூறிவிட்டார். தற்போது ஆரவ், நடிகை ராஹீயை செப்டம்பர் 6ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

image


Advertisement

ராஹீ, கவுதம் மேனனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘ஜோசுவா இமை போல் காக்க’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். ஆனால் இந்த திருமணம் பற்றிய எந்தத் தகவலும் இரு தரப்பினரிடம் இருந்தும் இன்னும் வரவில்லை.

நரேஷ் சம்பத் இயக்கத்தில், ’ராஜா பீமா’ என்ற ஆக்‌ஷன் - த்ரில்லர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஆரவ். இந்த படத்தில் ஓவியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement