80 வருடங்கள் வெட்டாததால் 5 மீட்டர் வளர்ந்த தலைமுடி - அதிசயக்க வைக்கும் 92 வயது முதியவர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வியட்நாமைச் சேர்ந்த 92 வயதான ஞுயேன் வான் சியென் என்ற நபர் 80 வருடங்களாக தனது தலைமுடியை வெட்டாமல் வளர்ந்துக்கொண்டிருக்கிறார். ஐந்து மீட்டர் நீளமான இந்த முடியைப் பார்த்து பெருமிதம் கொள்கிறார் சியென்.


Advertisement

தன் தலைமுடியை வெட்டிவிட்டால் தான் இறந்துவிடுவார் என அவர் நம்புகிறார். தான் எதையும் மாற்றத் துணியவில்லை என்றும், இதுவரை தலையை சீவியதுகூட இல்லை என்றும் அவர் கூறுகிறார். ஹோ சி மின் நகரத்திலிருந்து மேற்கே சுமார் 80 கி.மீ தொலைவில் இவர் வசித்துவருகிறார். அந்த முடியை தான் கவனமாகப் பார்த்துக்கொள்வதாகவும், ஒரு துணியில் மூடி உலர்த்தி, சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருப்பதாக அவர் கூறுகிறார்.

image


Advertisement

சியென், தனது தலைமுடி தொடர்ந்து வளரும் என்பதைன உறுதியாக நம்புகிறார். ஒரு ஆரஞ்சுநிற தலைப்பாகையால் முடியை கட்டி வைத்திருக்கிறார். அவர் பள்ளியில் படிக்கும்போது முடியை வற்புறுத்தி வெட்டச்செய்திருக்கிறார்கள். மூன்றாம் வகுப்பிற்குப் பிறகு பள்ளிக்குச் செல்லாததால், அதன்பிறகு வெட்டவோ, சீவவோ அல்லது தலையைக் கழுவவோ கூடாது என முடிவு செய்திருக்கிறார்.

தலைமுடி கருமையாக, அடர்த்தியாக, வலிமையாக இருந்திருக்கிறது. அதை மென்மையாக்க சீவிவிட்டிருக்கிறார். அதன்பிறகு தலைமுடியை தொட்டபோது, ஒரே இரவில் மிகவும் கடினமாகிவிட்டதாகவும், இப்போது தலையுடன் இணைந்து அதற்கு சொந்தமாகிவிட்டதாகவும் கூறுகிறார்.

image


Advertisement

துவா என்ற தேங்காய் மதத்தை சியென் பின்பற்றுகிறார். அதன் நிறுவனம் தேங்காய்களால் மட்டுமே உயிர்பிழைத்ததால் இந்த பெயரை இட்டிருக்கிறார். இப்போது இந்த நம்பிக்கை வியட்நாமில் தவறான நம்பிக்கையாகக் கருதப்பட்டு தடைசெய்யப்பட்டுள்ளது. முடிக்கும் இறப்புக்கும் உள்ள தொடர்பையும் அவர் நம்புகிறார். ஒருமுறை தனது தலைமுடியை சரம்மூலம் இணைக்க முயற்சித்தநபர் ஒருவர் இறந்துவிட்டதாக அவர் கூறுகிறார். இவை பார்ப்பதற்கு எளிமையாகத் தெரிந்தாலும், அவை புனிதமானவை என்று கூறுகிறார்.

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement