பொறியியல் கலந்தாய்வுக்கு ரேண்டம் எண் வெளியீடு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ள 1,31,436 பேருக்கான சமவாய்ப்பு எண்கள் ( Random Number) வெளியிடப்பட்டது.


Advertisement

தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர கடந்த ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 16 வரை 1,60,834 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1,31,436 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.

அவர்களுக்கு சமவாய்ப்பு எண்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ரேண்டம் எண் வெளியிடபட்டது. ஒரே மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கு முன்னுரிமை ஏற்படுத்தும் 10 இலக்கு எண் வெளியிடப்பட்டது. குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அனைத்து பதிவு செய்த மாணவர்களுக்கும் ரேண்டம் எண் அனுப்பப்பட்டது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement