ஹீரோயின்கள் அனைவருக்கும் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் என்று நடிகை ரிது வர்மா கூறினார்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படம், ’துருவநட்சத்திரம்’. இதில் ரிது வர்மா ஹீரோயினாக நடிக்கிறார். இவர் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ’பெல்லி சூப்புலு’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.
’துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிப்பது பற்றி அவர் கூறும்போது, ’இந்தப் படத்தின் கதை பற்றியோ என் கேரக்டர் பற்றியோ, நான் ஏதும் சொல்ல இயலாது. இந்தப் படத்தில் விக்ரம் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோருடன் பணியாற்றுவது மறக்க முடியாதது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று எல்லா நடிகைகளுக்கும் ஆசை இருக்கும். எனக்கும் அப்படித்தான். எனது கனவு நனவாகியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். விக்ரம் மீது நான் அதிக மரியாதை வைத்திருக்கிறேன். அவருடன் நடிக்கும்போது நிறைய கற்றுக்கொள்கிறேன்’ என்றார் ரிது வர்மா. இவர் தனுஷின் ’வேலையில்லா பட்டதாரி 2’ படத்திலும் நடித்துள்ளார்.
Loading More post
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று அதிகம் - மருத்துவமனை தகவல்
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3ஆவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!
சென்னை: புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!
4 மீனவர்கள் உயிரிழப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 11ம் கட்ட பேச்சுவார்த்தை: உடன்பாடு எட்டப்படுமா?
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!