”6 ரூபாய்க்கு ஹெட்போன்” ஆஃபர் அறிவித்த செல்போன் கடைக்கு நேர்ந்த சோகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நெல்லை சந்திப்பு பகுதியில் நேற்று புதிதாக துவங்கப்பட்ட தனியார் செல்போன் கடையில் 6 ரூபாய்க்கு ஹெட்போன் வழங்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.


Advertisement

image
நெல்லை சந்திப்பு தேவர் சிலை அருகே தனியார் செல்போன் கடை ஒன்றன் ஆறாவது கிளை நேற்று தொடங்கப்பட்டது, இதன் துவக்க விழாவை முன்னிட்டு 6 தினங்களுக்கு ஹெட்போன் மற்றும் டெம்பர் கிளாஸ் 6 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுவதாகவும், தினமும் முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டுமே இந்த சலுகை என்றும் செல்போன் எண்ணை பதிவு செய்தவர்களுக்கு 6 தினங்களுக்கு 600 பேருக்கு மட்டுமே விற்பனை செய்யபடுவதாக அந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.


இதனையடுத்து இன்று அந்த கடையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலையும் மீறி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஏராளமானோர் முண்டியடித்துக் கொண்டு பொருட்களை வாங்க ஆர்வம் காட்டினர். தகவல் அறிந்து வந்த சந்திப்பு காவல்துறையினர் கொரோனா வைரஸ் பரவி வரும் வேளையில் அதிக அளவு கூட்டத்தை கூட்டி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்ததற்காக கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்,


Advertisement


மாநகராட்சி அதிகாரிகள் வைரஸ் நோய் பரவும் விதத்தில் செயல்பட்டதற்காக கடையை 01.09.2020 வரை சீல் வைத்து கடைக்கு நோட்டீஸ் ஒட்டி சென்றனர்..

loading...

Advertisement

Advertisement

Advertisement