கடற்கொள்ளையர் கெட்டப்பில் இயக்குநர் செல்வராகவன்: வைரல் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பின் கடற்கொள்ளையர் கெட்டப்பில் இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி படங்களின் மூலம் புகழை அடைந்தவர் இயக்குநர் செல்வராகவன். அவரது படங்கள் மூலமாகத்தான் தனுஷ் என்ற திறமையான நடிகர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தார். ஹீரோவாக நடிக்க தோற்றம், உடல்வாகு எதுவும் தேவையில்லை என்பதையும் தனது படம் மூலம் நிரூபித்து தனுஷை நடிகராக அறிமுகமாக்கியவர் செல்வராகவன்.

image


Advertisement

அதேபோல, ரவுடிகள் என்றாலே குண்டாக, கருப்பாக இருப்பார்கள் என்ற மாயையையும் உடைத்துக்காட்டியவர் இதே செல்வராகவன் தான். தனது ’புதுப்பேட்டை’ படத்தில் கொக்கி குமார் என்ற பாத்திரத்தில் ஒல்லியான உடல்வாகுடன் கத்தியை சுழற்றி ரவுடி கெட்டப்பில் தனுஷை மிரள வைத்தார். இப்படத்தின் மூலம் ரவுடிகளுக்கான பிம்பத்தையும் உடைத்தார் செல்வராகவன். இப்போது, ஹீரோவாகவும் நடிகை கீர்த்தி சுரேஷுடன் சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார்.

image

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், அவரது காதல் மனைவி கீதாஞ்சலி உருவாக்கிக்கொடுத்த கடற்கொள்ளையர் கெட்டப் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஹாலிவுட்டில் நான்கு பாகங்களாக வெளியாகி பெரும் வெற்றியையும் வசூலையும் குவித்த ’பைரெட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ பட ஜானி டெப் கெட்டப்பில் கடற்கொள்ளையராக செல்வராகவன் காட்சியளிப்பது கண்களை கொள்ளையடிக்கிறது என பலரும் கூறுகின்றனர்.


Advertisement

 

இயக்குநராகவே பார்த்த செல்வராகவன் இப்போது நடிகராகியிருப்பதால் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement