காஷ்மீரின் ஏழை சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி - கடிதம் எழுதிய ரெய்னா

காஷ்மீரின் ஏழை சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி - கடிதம் எழுதிய ரெய்னா
காஷ்மீரின் ஏழை சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி - கடிதம் எழுதிய ரெய்னா

ஜம்மு காஷ்மீரின் கிராமப்புற ஏழை சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்க ஆர்வமாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரெய்னா, ஜம்மு காஷ்மீரின் காவல்துறை இயக்குநர் தில்பக் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்

அந்தக் கடிதத்தில், இந்த கடிதத்தை நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் எழுதுகிறேன். ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட்டிற்கான வாய்ப்புகள் கிடைக்காத கிராப்புற சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்கி அவர்களை உருவாக்க வேண்டும். என்னுடைய 15வருடகால கிரிக்கெட் அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுக்க முடியும். ஜம்மு காஷ்மீரின் பள்ளி கல்லூரிகளில் இருந்து திறமையான சிறுவர்களை கண்டறிவதே என் நோக்கம்.

எதிர்கால கிரிக்கெட்டிற்கு திறமையான ஆட்களை உருவாக்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்வேன். கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல. அது தனிமனித ஆரோக்யம் ஒழுக்கம் சார்ந்த விஷயம். சிறுவர்கள் விளையாட்டிற்கான பயிற்சியில் ஈடுபடும்போது அவர்கள் தானாகவே ஒழுக்கம், உடல்நலம் சார்ந்து சிந்திக்க தொடங்குவார்கள். இந்த வாய்ப்பை எதிர்கால இந்தியாவிற்கு என்னால் பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com