சிறுவனை கொலை செய்த 14 வயது சிறுவன்! காட்டிக்கொடுத்த சிசிடிவி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விளையாடிக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட சண்டையால் 14 வயது சிறுவனை மற்றொரு சிறுவன் காய்கறி வெட்டும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது சண்டிகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

சண்டிகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது நைட்டிக் என்ற சிறுவனுக்கும், அதே வயதுடைய மற்றொரு சிறுவனுக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால், வீட்டின் உள்ளேச் சென்று சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து,நைட்டிக்கை குத்தியுள்ளான் சிறுவன்.

image


Advertisement

இந்த எதிர்பாராத தாக்குதலால் கீழே மயங்கி கீழே விழுந்த நைட்டிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது, அக்குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. யார் கொன்றார்கள் என்று தெரியாததால் காவல்துறையினர் சிசிடிவி காட்சியை பார்த்துள்ளனர். அதில், இரண்டு சிறுவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு நைட்டிக்கை மற்றொரு சிறுவன் கத்தியால் குத்திவிட்டு ஓடியது தெரியவந்துள்ளது.

image

கொலை செய்த சிறுவன் தப்பியோடி வனப்பகுதியில் மறைந்திருந் நிலையில் காவல்துறையால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவர் சிறுவன் என்பதால் சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படுள்ளார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement