தேசிய மாற்று பாலினத்தவர் ஆணையத்தின் பிரதிநிதியாக மதுரையை சேர்ந்த கோபிசங்கர் நியமனம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள தேசிய மாற்று பாலினத்தவர் ஆணையத்திற்கு மதுரையை சேர்ந்த கோபிசங்கர் என்பவர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

image
மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறையின் கீழ் தேசிய மாற்று பாலினத்தவர் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய சமூக நீதி அமைச்சரை தலைவராகக் கொண்டு மாற்று பாலினத்தவர் ஆணையம் செயல்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசுத் துறைகளை சேர்ந்த துணைச்செயலர்கள் அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவின் 5 பிராந்தியங்களுக்கும் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தெற்கு பிராந்திய பகுதிகளான ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு ஆகியவற்றுக்கும் பிரதிநிதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதில் தமிழக பிரதிநிதியாக மதுரையை சேர்ந்த 29 வயது நபர் கோபிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகைய உயரிய இடத்தை அடைந்துள்ள கோபிசங்கர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சமயம் மற்றும் மெய்யியல் துறையில் பட்டம் பெற்றவர். தேசிய மாற்று பாலினத்தவர் ஆணையத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பிரநிதிகளில் மிக இளம்வயது பிரதிநிதி கோபிசங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

image
அவர் நம்மிடம் பேசியபோது... " தேசிய மாற்று பாலினத்தவர் ஆணையத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதன் மூலம் திருநங்கை, திருநம்பி, இடையிலிங்க குழந்தைகளின் வாழ்வு சார்ந்த பிரச்னைகள், உரிமைகள் மற்றும் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளுக்கு வலுவான குரல் எழுப்ப முடிவதோடு, அவர்கள் சந்திக்கும் சமூக பிரச்னைகளுக்கு எளிய முறையில் தீர்வு காண முடியும்.

இந்தியாவில் ஆண், பெண் மர்ம உறுப்பு குறைபாடுகளோடு பிறக்கும் இடையிலிங்க குழந்தைகளை அதிகளவில் சிசுக்கொலை செய்யும் நிலைமை உள்ளது. அதனை கலைவதற்கு தேசிய மாற்று பாலினத்தவர் ஆணையம் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். திருநங்கை, திருநம்பிகள் போன்றோருக்கு ஏற்படும் பிரச்னைகளை தேசிய மற்றும் உலகளவின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்மானம் மற்றும் நீதி விசாரணை நடத்த முயற்சிகள் மேற்கொள்ள உள்ளேன் எனத் தெவித்தார்.

image
திருநங்கை, திருநம்பி ஆகியோர் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். அவர்களின் கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் என எதுவுமே கிடைப்பதில்லை. அதனை களையவும் ஒரு பிரதிநிதியாக செயல்படுவேன் எனக் கூறினார். பத்து வருடங்களுக்கு பிறகு மத்திய அரசு தேசிய மாற்று பாலினத்தவர் ஆணையத்தை அமைத்துள்ளது. இதில் பிரதிநிதியாக நியமித்திருப்பதில் மகிழ்ச்சி என்றாலும், செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளது எனத் தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement