பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - மகள் 5 மாத கர்ப்பம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாமக்கல் அருகே பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மகள் தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார்.


Advertisement

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி அடுத்த வடுகப்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி பாலசுப்பிரமணி. இவரது மகள் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திடீரென மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தாய் மற்றும் உறவினர்கள் மாணவியிடம் விசாரித்துள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவியை பல முறை அவரது தந்தையான பாலசுப்பிரமணி பாலியல் வன்கொடுமை செய்ததும், அதன் காரணமாக மாணவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருப்பதும் தெரிய வந்தது.

image


Advertisement

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தினர் சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர். இதனைத்தொடர்ந்து சிறுமி அளித்த புகாரின் பேரில் நாமக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தை பாலசுப்பிரமணியத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement