தெரியாமல் ஒரு க்ளிக்.. ரூ.2600க்கு பிரஞ்ச் ஃப்ரைஸ் ஆர்டர் செய்த 3 வயது சிறுவன்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வீட்டில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி விடுகின்றன. அப்படி அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு குறும்புக்கார 3வயது சிறுவன் செல்போனில் ரூ.2600க்கு பிரஞ்ச் ஃபிரைஸை ஆர்டர் செய்துள்ளார். இது தொடர்பாக குழந்தையின் அம்மா ஆஷ்லே ஃபேஸ்புக்கில் பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.


Advertisement

image

வீட்டின் கதவை மெக்டோனால்ட்ஸ் டெலிவரி பாய் தட்டியுள்ளார். வீட்டில் இருந்த தாய் ஆஷ்லே எதுவும் ஆர்டர் செய்யவில்லையே என சந்தேகமாக கேட்டுள்ளார். ஆனால் ஆர்டரானது அவரது கணவர் செல்போனில் இருந்து சென்றுள்ளது. செல்போன் 3 வயது குழந்தையின் கையில் உள்ளது. அப்போது நடந்தது ஆஷ்லேவுக்கு புரிந்துள்ளது.


Advertisement

image

தந்தையின் செல்போனை கையில் வைத்துக்கொண்டு யூடியூப்பில் வீடியோ பார்த்துக்கொண்டு இருந்த சிறுவன் தான், தெரியாமல் ஆர்டருக்கான ஆப்ஷனை க்ளிக் செய்துள்ளார் என புரிந்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.2600க்கு பிரஞ்ச் ஃப்ரைஸை ஆர்டர் செய்த சிறுவன் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளார். இது மிகவும் ஆச்சரியாகமாகவும், நகைச்சுவையாகவும் இருப்பதாக பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்

loading...

Advertisement

Advertisement

Advertisement