"தோனியே அனைத்தையும் தாங்கிக்கொள்வார்"-பிராவோ பெருமிதம் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

போட்டியின்போது ஏற்படும் அழுத்தங்கள் அனைத்தையும் தோனியே தாங்கிக்கொள்வார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் பிராவோ தெரிவித்துள்ளார்.


Advertisement

13-ஆவது ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இப்போது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியினர் போட்டிக்கு தயாராகும் நோக்கில் துபாய் சென்றுள்ளனர். முன்னதாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெறவுள்ளதாக தோனி அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அவருக்கு வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.

image


Advertisement

இந்நிலையில் "டைம்ஸ் ஆஃப் இந்தியா" நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள பிராவோ "தோனியைதான் எப்போதும் கிரிக்கெட்டில் சிறந்த பினிஷராக நான் கருதுவேன். உதாரணத்திற்கு நான் பவுலராக இருக்கும்போது 6 ரன்கள் எடுத்தால் எதிரணி வெற்றிப பெறும் என்ற நிலையில், பேட்ஸ்மேனாக தோனி இருந்தால் எப்படி இருக்கும். அவரை 6 ரன்கள் எடுக்கவிடாமல் தடுத்துவிட்டால் அது நான் செய்த மிகப்பெரிய சாதனையாக பார்ப்பேன்" என்றார்.

image

மேலும் பேசிய அவர் "நான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவருக்கு நிறைய முறை பந்துவீசி இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஏனென்றால் உலகின் தலைச் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பவுலிங் செய்வதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் ரசிகராக தோனி எப்போதும் விளையாட வேண்டும் என்றே விரும்புகிறேன். ஒரு வீரராகவும் கேப்டனாகவும் தோனி போட்டியின் அனைத்து அழுத்தங்களையும் தாங்கிக்கொள்வார். எப்போதும் தடுமாறியதில்லை. ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் தோனி" என்றார் பிராவோ.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement