35 ஆண்டுகளுக்கு பிறகு எழுதியவரிடமே வந்து சேர்ந்த கடிதம்..!

Kayaker-reunites-author-with-35-year-old-message-in-a-bottle

அமெரிக்காவில் உள்ள டெலாவார் ஆற்றில் 35 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கடிதத்தை படகோட்டி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்


Advertisement

அமெரிக்காவின் பிராட் மற்றும் அவரது நண்பர் இருவரும் அமெரிக்காவில் உள்ள டெலாவார் ஆற்றில் படகு சவாரி செய்துள்ளனர். எப்போதும் படகு சவாரி மட்டும் செய்யாமல் முடிந்த அளவு ஆற்றில் மிதக்கும் குப்பைகளையும் அவர்கள் சேகரித்து சுத்தப்படுத்துவது வழக்கம். அன்றும் வழக்கம் போல் பிராட் ஆற்றில் மிதந்து வந்து கரை ஒதுங்கிய பாட்டில் ஒன்றை சேகரித்துள்ளார்.

image


Advertisement

அதனைப் பார்த்த அவரது நண்பர், பாட்டிலுக்குள் ஏதோ இருப்பதாக தெரிவித்துள்ளார். உள்ளே கடிதம் ஒன்று இருந்துள்ளது. அது கேத்தி ரிட்டில் என்பவர் 1985ம் ஆண்டு எழுதிய கடிதம் அது. அந்தக் கடிதத்தில் குடும்பம் குறித்தும், வளர்ப்பு பிராணிகள் குறித்தும் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தை வரலாற்று ஆய்வு நிறுவனத்திடம் பிராட் ஒப்படைத்து உரியவர்களிடம் கொடுத்துவிடும்படி தெரிவித்துள்ளார். பல நடவடிக்கைகளுக்கு பின் கடிதம் எழுதிய கேத்தி ரிட்டிலை கண்டுபிடித்துள்ளனர்.

image

கடிதத்தை கண்ட ரிட்டில் ஆச்சரியத்தில் மூழ்கிபோனார். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கடிதம், வெள்ளம், புயல் மழையைக் கடந்து மீண்டும் என்னுடன் சேர்ந்துள்ளது. இது தான் விதி என தெரிவித்துள்ளார். அப்போது நானும் என் அத்தை மகனும் கடற்கரையில் இருந்து இந்த கடிதத்தை எழுதினோம். நான் அதிகம் பயணம் செய்ததில்லை. ஆனால் இந்த கடிதம் உலகத்தை சுற்றி என்னிடம் திரும்பவும் வந்துள்ளது என தெரிவித்துள்ளார்


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement