சொல்ல வார்த்தைகள் இல்லை... தோனி தான் ஹீரோ - கேஎல் ராகுல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

என்னைப் போன்று சிறிய நகரங்களில் இருந்து கிரிக்கெட்டிற்கு வருபவர்களுக்கு தோனி தான் ஹீரோ என கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்


Advertisement

முன்னாள் கேப்டன் தோனி ஆகஸ்ட் 15-ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து உலகெங்கிலும் பல்வேறு நாட்டு கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பல வீரர்கள் தோனிக்கு ஃபேர்வெல் மேட்ச் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

image


Advertisement

கிரிக்கெட் வீரர்கள் பலரும் தோனி உடனான தங்களுடைய அனுபவங்களையும், நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனுமான கேஎல் ராகுல் தோனி குறித்து பேசியுள்ளார்.

ஐபிஎல்-ன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பேசிய கேஎல் ராகுல், தோனியின் ஓய்வு என்பது இந்தியாவுக்கும், கிரிக்கெட் உலகத்திற்கும் உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது. நாங்கள் எல்லாம் தோனி போல ஆகவேண்டுமென பார்த்து வளர்ந்தவர்கள். குறிப்பாக என்னைப் போன்று சிறிய நகரங்களில் இருந்து கிரிக்கெட்டிற்கு வருபவர்களுக்கு தோனி தான் ஹீரோ.

image


Advertisement

எங்கிருந்து வருகிறோம் என்பது முக்கியமல்ல. எப்போதும் இலக்கை நோக்கிய முயற்சியே முக்கியம் என நாங்கள் சொல்லிக்கொள்வோம். எனக்கு தோனியிடம் பேசுவதற்கு போதுமான வார்த்தைகள் இல்லை. நான் நீண்ட நேரம் அவரை கட்டித்தழுவி நன்றி என சொல்வேன் எனத் தெரிவித்துள்ளார்

loading...

Advertisement

Advertisement

Advertisement