”ஷார்ஜா முதல் அபுதாபி வரை” ஐ.பி.எல் தொடருக்கான மைதானங்கள் எப்படி?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த சில நாட்களில் துபாயில் ஆரம்பமாக உள்ளது. 


Advertisement

அதற்கு தயாராகும் வகையில் எட்டு ஐ.பி.எல் அணிகளின் வீரர்களும் துபாய்க்கு பறந்து சென்றுள்ளனர். 

2014 ஐ.பி.எல் தொடரில் சில போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்ற நிலையில் இந்த சீசனுக்கான அனைத்து போட்டிகளும் துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 


Advertisement

‘துபாயில் நிலவும் தட்ப வெட்ப சூழலில் கிரிக்கெட் விளையாடுவதென்பது பெரும் சவாலாக இருக்கலாம். வெப்பமான வானிலையில் ஆடுகளத்தின் தன்மை எப்படி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது’ என சொல்லியிருந்தார் சுரேஷ் ரெய்னா.

கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் இந்த ஐ.பி.எல் தொடரில் பெரிய ஸ்கோர் மேட்ச்களை பார்க்க முடியாது என சொல்லி வருகின்ற சூழலில் துபாயில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற உள்ள மைதானங்களை குறித்த பார்வை. 

image


Advertisement

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி கிரிக்கெட் ஸ்டேடியம் என்று அழைக்கப்படும் இந்த மைதானத்தில் மொத்தமாக முப்பதாயிரம் பார்வையாளர்கள் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ளன. பல்நோக்கு மைதானமான இந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் அதிகம் நடத்தப்பட்டுள்ளன. 

image

ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்

உலகின் மிகச் சிறந்த ஸ்டேடியங்களில் ஒன்றாக இந்த மைதானம் திகழ்கிறது. அதிக அளவிலான ஒருநாள் போட்டிகளை இந்த மைதானத்தில் நடத்தியதற்காக கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளது. 

இதுவரை 240 ஒருநாள் போட்டிகள் மைதானத்தில் விளையாடியுள்ளன. 1998 இல் ஆஸ்திரேலிய பந்து வீச்சை வெறி கொண்டு வேட்டையாடியதும் இந்த மைதானத்தில் தான்.

image

ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானம்

அபுதாபியில் அமைந்துள்ள இந்த மைதானத்தில் 2006 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் இருபதாயிரம்  பேர் ஒரே நேரத்தில் போட்டிகளை இந்த மைதானத்தில் காணலாம். 

இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 2006 இல் விளையாடிய ஒருநாள் போட்டிதான் முதல் போட்டியாகும். 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement