[X] Close

ஜே.இ.இ, நீட் தேர்வை தள்ளி வையுங்கள் - நடிகர் சோனு சூட் வேண்டுகோள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா பரவி வரும் இந்த சூழ்நிலையில் ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டுமென்று நடிகர் சோனு சூட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Advertisement

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும், ஜே.இ.இ முதன்மைத் தேர்வு செப்டம்பர் 1-6-ம் தேதி வரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரும் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர்.

இந்தநிலையில், கொரோனா பரவி வரும் இந்த சூழ்நிலையில் ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டுமென்று நடிகர் சோனு சூட் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் " மத்திய அரசிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். ஜே.இ.இ தேர்வு, நீட் தேர்வு போன்றவைகளை தள்ளி வைக்க வேண்டும். கொரோனா வரை வரும் இந்த நேரத்தில் நாம் மிகவும் அக்கறை கொள்ள வேண்டும். மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement