ஏர் இந்தியா விமானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு விமானத்தில் பயணிக்க இன்று புதிய விதிமுறைகளை சேர்த்துள்ளது. அதில் 12 வயது முதல் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் பிசிஆர் சோதனையில் கொரோனா நெகட்டிவ் என்ற அறிக்கை இருந்தால் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும் விமானத்தில் பறப்பதற்கு முன்னதாக 96 மணிநேரங்களுக்குள் ஸ்கிரீனிங் சோதனை எடுப்பது அவசியம் என்றும் கூறியுள்ளது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களில் அல்லது அரசு சான்றிதழ் பெற்ற மையங்களில் மட்டுமே எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்பிக்கவேண்டும்.
தற்போது இந்தியாவிற்கு வரும் பயணிகளை 7 நாள் தனிமைப்படுத்துவதோடு, மீண்டும் 7 நாள் வீட்டிலும் தனிமைப்படுத்தலை கட்டாயமாக்கி உள்ளது. இதுவே விமானம் புறப்படும் 96 மணிநேரத்திற்குள் ஆர்டி - பிசிஆர் சோதனையில், கொரோனா நெகட்டிவ் அறிக்கையை வழங்குபவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளித்துள்ளது.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்