[X] Close

வீழ்வேன் என்று நினைத்தாயோ ! கொரோனா காலத்தில் மாத்தி யோசித்த 90s கிட்ஸ்!

Subscribe
90s-Kids-favorite-snacks-are-sold-at-this-trolley-shop

கல்கோனா, தேன்மிட்டாய், இலந்தப் பழம், ஜவ்வு மிட்டாய்... என 90s கிட்ஸ்களின் ஃபேவரைட் தின்பண்டங்கள் இந்த தள்ளுவண்டிக் கடையில் விற்கப்படுகிறது.


Advertisement

நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் கிருபாகரன். கேட்ரிங் தொழிலுக்கான பாடப்பிரிவை படித்துள்ள இவர், நெல்லையில் உள்ள தனியார் உணவகத்தில் பணி செய்து வந்தார், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சொந்தமாக டீ கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமல் செய்யப்பட்ட பின்னர் டீ கடை தொழில் செய்யமுடியாத சூழல் ஏற்பட்டது.

அப்போது மாற்று தொழில் செய்வது குறித்து பலரிடமும் ஆலோசனை கேட்டு உள்ளார். இறுதியாக நண்பர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பார்த்த பதிவுகள் அடிப்படையில் 90's கிட்ஸ் எண்ணங்களையும் நீங்கா நினைவுகளையும் பிரதிபலிக்கும் விதமாக 90 களில் பிறந்த குழந்தைகள் உண்டு மகிழ்ந்த மிட்டாய்கள், இனிப்பு பண்டங்கள், விளையாட்டுப் பொருட்கள் கொண்ட கடையை திறக்கலாம் என முடிவு செய்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கடை திறந்துள்ளார்.


Advertisement

image

அதில் கமர்கட்டுகள், தேன்மிட்டாய், இலந்தபழம், ஜவ்வு மிட்டாய், அப்பம், கல்கோனா என 60 வகையான 90's கிட்ஸ் மிட்டாய் வகைகளும் பம்பரம், காத்தாடி, கோலிகுண்டு, ராஜா ராணி பொம்மை போன்ற விளையாட்டு பொருட்கள் அடங்கிய 30க்கும் மேற்பட்ட பொருட்கள் என 85 க்கும் மேற்பட்ட பொருட்களை கடையில் விற்பனைக்கு வைத்து உள்ளார்.

புதிய பேருந்து நிலையம் செல்லும் பைபாஸ் சாலையில் வைக்கப்பட்டுள்ள கடையை பார்த்து செல்லும் பலரும் விரும்பி வந்து வாங்கி செல்கின்றனர், பழைய நினைவுகளை திரும்பி பார்க்கும் பலரும் பிறந்த நாள் விழா என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இதனால் நல்ல வியாபாரம் இருப்பதாகவும் கூறுகிறார் கடை ஊழியர்.


Advertisement

image

2k கிட்ஸ் என்று சொல்லக்கூடிய 2000 களில் பிறந்தவர்கள் இது போன்ற மிட்டாய்களை கேள்விபட்டிருக்கிறோம் ஆனால் முதல்முறையாக நெல்லையில் தற்போது இந்த பொருட்களை பார்ப்பதுடன் வாங்கி சுவைக்க முடிகிறது என்று தெரிவிக்கின்றனர்.

90களில் பிறந்தவர்கள் சிறு வயதில் இதனை வாங்கி உண்டு மகிழ்ந்தோம், அதன் பின்னர் இந்த பொருட்கள் எங்கும் கிடைப்பதில்லை, ஆனால் நெல்லை மாநகர பகுதியில் இந்த கடையை பார்த்தவுடன் வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொருட்களை தேடி தேடி வாங்கிவதுடன் பழைய நினைவுகளை சமூக வலை தளங்களில் பகிர்வதுடன் தன் வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளுக்கு கொடுப்பதற்கும் வாங்கிச் செல்வதாக தெரிவிக்கின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close