கொரோனாவால் கணவர் உயிரிழந்ததை தாங்கிகொள்ள முடியாத பெண் தன்னுடைய மாற்றுத்திறனாளி மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மேற்கு வங்கத்தின் ஹவ்ரா மாவட்டத்தின் ராஜபூர் பகுதியை சேர்ந்த 45 வயது நபருக்கு கடந்த சனிக்கிழமை சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த அவரை குடும்பத்தினர் உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சில மணி நேரங்களிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. அத்துடன் மனைவி மற்றும் குடும்பத்தினரை தொடவும் அனுமதிக்கவில்லை. இதற்கிடையே கொரொனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்து இறந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. சமூக இடைவெளியுடனும் மனைவி, மாற்றுத்திறனாளி மகன் மற்றும் உறவினர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். பின்னர் வீட்டிற்கு வந்த மனைவி, தனது மகனும் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். சில மணி நேரங்களுக்குப் பின்னர் உணவை எடுத்துக்கொண்டு சென்று உறவினர்கள் கதவை தட்ட, சத்தம் எதுவும் கேட்கவில்லை. பலமுறை கதவை தட்டியும் திறக்கப்படாததால் ஜன்னலை உடைத்து உள்ளே பார்த்தபோது, தூக்கில் தொங்கியபடி அப்பெண்ணும், அவரது மகன் தரையில் விழுந்தும் கிடந்தார்.
இதையடுத்து காவல்துறையினர் வரவழைத்து இருவரது உடலும் கைப்பற்றப்பட்டன. விசாரணையில் அப்பெண் மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!