கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் இருந்து அகற்றப்படும் சால்வினியா படர் தாவரம்...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொடைக்கானல் ஏரியில் இருந்து அகற்றி மலை மலையாய் குவிக்கப்படும் வெளிநாட்டு சால்வினியா அடர் படர் தாவரம்.


Advertisement

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாதத்தில் இருந்து, திடீரென்று வெளிநாட்டு வகை படர் தாவரம் அதிகஅளவில் ஏரி நீரின் மேற்பரப்பிலும், நீருக்குள்ளும் வளரத்துவங்கியது.

image
இதனை போர்க்கால அடிப்படையில் அகற்றாவிட்டால், ஏரிமுழுவதும் படர்ந்து, நீருக்குள் சூரியஒளி செல்லாமல் பிராணவாயு உற்பத்தி தடைபடும். இதனால் ஏரியின் உயிர்ச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சூழலியல் அமைப்புகள் குரல் கொடுத்தனர்.


Advertisement

image
அதன் அடிப்படையில் நகராட்சி பணியாளர்கள், சால்வினியா அடர் தாவரத்தை அகற்றும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். ஏரியில் இருந்து அகற்றப்பட்ட சால்வினியா தாவரத்தை மலை மலையாக குவித்து வைத்துள்ளனர்.

image
ஏரிக்குள் சால்வினியா அடர்படர் தாவரத்தை முழுமையாக அகற்ற வேண்டும். இல்லையென்றால் மீண்டும் இந்த தாவரம் வேகமாக படந்து ஏரியின் இயற்கை தன்மையை பாழ்படுத்திவிடும் என்று சூழலியல் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement