'ஒரேயொரு தவறு, ஒட்டுமொத்த டீமும் குளோஸ்’ எச்சரிக்கும் விராட் கோலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
நாம் ஒருவர் செய்யும் தவறால் நம்முடைய ஒட்டுமொத்த தொடரும் பாழாகிவிடும் என்று விராட் கோலி அணி வீரர்களை எச்சரித்துள்ளார்.
 
ஐபிஎல் போட்டிக்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றடைந்துள்ளன. அணி வீரர்கள் தங்கள் ஹோட்டல்களிலும் ரிசார்ட்டுகளிலும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். வீரர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகஸ்ட் 28 முதல் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்பு கடுமையான நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் அனைவரும் அணியிருனடன் நேற்று இணைந்தனர். அப்போது கேப்டன் விராட் கோலி மற்றும் டீம் இயக்குனர் மைக் ஹெசன் ஆகியோர் நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வீரர்களிடம் எடுத்துரைத்தனர். 
 
image
 
யாராவது விதிகளை மீறுகிறார்களா என்று கோலி ஹெஸனிடம் கேட்டார். “பி.சி.சி.ஐ எழுதியுள்ள ஒரு ஆவணம் நம்மிடம் உள்ளது. இது அடிப்படையில் உங்கள் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
 
பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால் ஒட்டுமொத்த அணியும் 7 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படும். தயவுசெய்து அத்தகைய நெருக்கடிகளுக்குள் நமது அணியைத் தள்ளிவிட வேண்டாம்” என்று ஹெசன் அணி வீரர்களை கேட்டுக்கொண்டார். 
 
image
 
தொடர்ந்து அணி கேப்டன் விராட் கோலி வீரர்களிடம் பேசினார். ‘’யாராவது விதிகளை மீறினால், அது முழு அணியையும் வீழ்த்துவதாகும். ஏனெனில் இது அந்த வீரரை இழக்க முடியாதபோது போட்டியின் ஒரு கட்டத்தில் அது நிகழக்கூடும்.
 
என்னென்ன கட்டுப்பாடுகள் இருக்கிறதோ அதை நான் அனைத்தையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு வளையம் என்பதில் நான் அனைவரும் ஒரே சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். எந்த நேரத்திலும் இதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
 
ஏனென்றால், நாம் ஒருவர் செய்யும் தவறால் நம்முடைய ஒட்டுமொத்த தொடரும் பாழாகிவிடும் என்று நினைக்கிறேன். ஒருவர் கூட இதை விரும்பக்கூடாது’’ என்றார்.
 
 
 
loading...

Advertisement

Advertisement

Advertisement