சம்பள குறைப்பு செய்ததால் முதலாளியை கொன்று கிணற்றில் வீசிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தஸ்லீம் (21) என்ற இளைஞர் டெல்லியில் ஓம் பிரகாஷ் (45) என்பவரிடம் பணியாற்றி வந்துள்ளார். பால் முகவராக இருந்துள்ள ஓம் பிராஷிடம் வேலை பார்க்கும் தஸ்லீமுக்கு மாதம் ரூ.15ஆயிரம் சம்பளம். இந்நிலையில் கொரோனாவால் தொழில் சரிவர நடக்கவில்லை எனக் கூறி தஸ்லீமின் சம்பளத்தை ஓம் பிரகாஷ் குறைத்துள்ளார்.
இது குறித்து தஸ்லீம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இருவருக்குமான உரையாடல் வாக்குவதமாக முற்றியுள்ளது. அதில் ஓம் பிரகாஷ், தஸ்லீமை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த தஸ்லீம் ஓம் பிரகாஷ் தூங்கும் போது அவரது தலையை கட்டையால் தாக்கியுள்ளார். பின்னர் கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார். இறந்துபோன ஓம் பிரகாஷை ஒரு கோணியில் கட்டி அருகில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு வழக்கம்போல் இருந்துள்ளார். ஓம் பிரகாஷின் உறவினர்களிடம் அவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டதாக பொய் கூறியுள்ளார். ஆனால் மறுபக்கம் பயம் அதிகரிக்கவே இரவோடு இரவாக ஊரைவிட்டே தஸ்லீம் ஓடிவிட்டார்.
ஓம் பிரகாஷை காணாத உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். கடைசியாக தஸ்லீமுடன் தான் ஓம் பிரகாஷ் இருந்தார் என தெரியவர அந்த கோணத்திலும் விசாரணை நடைபெற்றது.இதற்கிடையே அருகில் உள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வருவதாக புகாரும் வந்தது. கிணற்றை சுத்தம் செய்து பார்த்தபோது ஓம் பிரகாஷின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் ஓம்பிரகாஷின் பைக், மற்றும் செல்போனுடன் மாயமான தஸ்லீமை போலீசார் தீவிரமாக தேடி டெல்லி பகுதியில் கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்
Loading More post
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
சேப்பாக்கம்-குஷ்பு; ராசிபுரம்-முருகன்; மயிலை-கே.டி.ராகவன்: லீக் ஆன பாஜக உத்தேச பட்டியல்!
விஜயகாந்த் தலைமையில் தேமுதிக வேட்பாளர்கள் நேர்காணல் தீவிரம்!
"எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது!” - மக்கள் நீதி மய்யம்
"கண் இருந்தால் கண்ணீர் வரத்தான் செய்யும்!" - கே.எஸ்.அழகிரி விளக்கம்
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?