குலாம் நபி ஆசாத்துடன் கபில் சிபில் உள்ளிட்ட தலைவர்கள் சந்திப்பு

குலாம் நபி ஆசாத்துடன் கபில் சிபில் உள்ளிட்ட தலைவர்கள் சந்திப்பு
குலாம் நபி ஆசாத்துடன் கபில் சிபில் உள்ளிட்ட தலைவர்கள் சந்திப்பு

காங்கிரஸின் அடுத்த தலைவர் யார் என்ற குழப்பங்கள் நீடித்த நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. 

இதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சிக்கு துடிப்பான தலைமை தேவை எ‌ன காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், சசி தரூர் உள்ளிட்ட 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். 

சோனியாவிற்கு எதிராக கடிதம் எழுதிய 23 காங்கிரஸ் தலைவர்கள் பாரதிய ஜனதாவுடன் ரகசியக் கூட்டு வைத்துள்ளார்கள் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாகவும் தகவல் வெளியானது. 

இதையடுத்து கபில் சிபல், குலாம் நபி ஆசாத் போன்றோர் ராகுலின் கருத்துக்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்டனர்.

இந்நிலையில் காலை 11 மணிக்கு தொடங்கி ‌காரசார விவாதத்துடன் நடைபெற்ற இக்கூட்டம் மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. 

கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் விவரித்தார் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தி நீடிக்க செயற்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளோம். மேலும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்தவும் காரிய கமிட்டி குழுவில் ஒரு மனதாக முடிவு செய்துள்ளோம்’ எனவும் தெரிவித்தார்.

கூட்டம் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சசி தரூர், மணீஷ் திவாரி மற்றும் கபில் சிபில் ஆகியோர் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத்தை அவரது வீட்டில் சந்தித்து தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com