காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக நீடிக்கிறார் சோனியா ‌காந்தி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தி நீடிக்க செயற்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளதாக கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். 
 
காங்கிரஸ் கட்சிக்கு துடிப்பான தலைமை தேவை எ‌ன காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், சசி தரூர் உள்ளிட்ட 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. 
image
சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள மூத்த உறுப்பினர்கள் காணொலி மூலம் கலந்து கொண்டனர். அப்போது, சோனியாவிற்கு எதிராக கடிதம் எழுதிய 23 காங்கிரஸ் தலைவர்கள் பாரதிய ஜனதாவுடன் ரகசியக் கூட்டு வைத்துள்ளார்கள் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாக முதலில் தகவல் வெளியானது. 
image
இதையடுத்து கபில் சிபல், குலாம் நபி ஆசாத் போன்றோர் ராகுலின் கருத்துக்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்டனர். கபில் சிபல் தனது ட்விட்டர் பதிவில் 'கடந்த 30 ஆண்டுகளாக பாரதிய ஜனதாவிற்கு ஆதரவாக எந்தக் கருத்தையும் தெரிவித்ததில்லை' எனக் குறிப்பிட்டிருந்தார். ராகுல்காந்தி தனது கூற்றை நிரூபித்தால் பதவி விலக தயார் என மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். 
 
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பாரதிய ஜனதாவுடன் தொடர்பு வைத்திருப்பதாக ஒருவார்த்தைகூட தனது பேச்சில் இடம்பெறவில்லை என்று ராகுல் காந்தி தன்னிடம் தொலைபேசியில் விளக்கமளித்ததாக ட்விட்டரில் பதிவிட்ட கபில் சிபல் தனது முந்தைய ட்வீட்டை திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தார். காலை 11 மணிக்கு தொடங்கி ‌காரசார விவாதத்துடன் நடைபெற்ற இக்கூட்டம் மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. 
image
காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் என்றும், ஆறு மாதத்திற்குள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தி நீடிக்க செயற்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளதாக கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். 
loading...

Advertisement

Advertisement

Advertisement